என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்-கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோரிக்கை
- தமிழகத்தில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் நீண்ட காலமாக உள்ள 10 முக்கியமான பிரச்னைகள் அல்லது குறைகள் குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா மற்றும் அருப்புக்கோட்டை தொகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 10 கிலோமீடடர் தொலைவிலேயே அமைந்துள்ளது.
கோவில்பட்டி:
தமிழகத்தில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் நீண்ட காலமாக உள்ள 10 முக்கியமான பிரச்னைகள் அல்லது குறைகள் குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
புதிய மாவட்டம்
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம், கோவில்பட்டி தொகுதிக்கு தேவையான திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுவை கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ வழங்கினார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
தென்காசியில் உள்ள திருவேங்கடம் தாலுகாவில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா மற்றும் அருப்புக்கோட்டை தொகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 10 கிலோமீடடர் தொலை விலேயே அமைந்துள்ளது.
எனவே இவற்றையெல்லாம் இணைத்து கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.
கோவில்பட்டி நகரின் மெயின் ரோட்டில் சுமார் 70 ஆண்டுகாலமாக இருந்து வந்த நீரோடை ஆக்கிரமிப்புகள் பொதுமக்கள் நலன் கருதி 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. தற்போது இந்த நீரோடை, நகரின் மையப்பகுதியில் இருப்பதால் பாதுகாப்பு கருதி ஓடையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
மருத்துவ கல்லூரி
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் ரூ. 4 கோடி மதிப்பில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
கோவில்பட்டியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். கழுகுமலையில் கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் இடத்தில் கால்நடை மருத்துவ கல்லூரியும் அமைக்க வேண்டும்.
கோவில்பட்டியில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்க இடம் கையகப்படுத்தப்பட்டு நிதி ஒப்புதல் வரை பெறப்பட்டுள்ளது. எனவே இங்கு அரசு விரைவாக செவிலியர் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். இனாம்மணியாச்சி, இலுப்பையூரணி, பாண்டவர்மங்கலம், நாலாட்டி ன்புத்தூர், திட்டங்குளம், மந்தித்தோப்பு ஆகிய ஊராட்சிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளனர். இங்கு குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்திட தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்