என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீ.கே.புதூர் அருகே புதிய பகுதி நேர ரேஷன் கடை- பழனி நாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சான் பட்டியில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.
- முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் பெரிதும் அவதி அடைந்தனர்.
சுரண்டை:
வீ.கே.புதூர் தாலுகா குறிச்சான்பட்டி பஞ்சாயத் தில் அமைந்த கரையாளனூர் பொது மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சான் பட்டியில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் பெரிதும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருவரின் முயற்சியின் பேரில், கரையாளனூரில் வியாழக்கிழமை தோறும் பகுதி நேர ரேஷன் கடை இயங்க அரசு அனுமதி அளித்து, அதற்கான தொடக்க விழா நடந்தது.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலருமான முரளிராஜா, ஆலங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிச்சான் பட்டி பஞ்சாயத்து தலைவர் மகர ஜோதி சரவணன் வரவேற்றார். தொடர்ந்து கரையாளனூர் கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை பழனிநாடார் எம்.எல்ஏ. திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.
பகுதிநேர ரேஷன் கடை அமைக்க, கடை வழங்கிய கரையாளனூர் சண்முக வேலுவிற்கு அனைவரும் பொது மக்களின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.தொடர்ந்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கரையா ளனூர் முருகன்,வக்கீல் ராமச் சந்திரன், குறிச்சான்பட்டி தி.மு.க. செயலாளர் துரைசாமி, விவசாய அணி ஜெயராஜ், இளைஞர் அணி திருமலைக்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கரையாளனூர் சண்முகவேலு செய்து இருந்தார்.