search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே புதிய மின்மாற்றி திறப்பு
    X

    புதிய மின்மாற்றி திறப்பு விழா நடந்தபோது எடுத்த படம்.

    கடையம் அருகே புதிய மின்மாற்றி திறப்பு

    • கடந்த 15 வருடங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் இருப்பதால் கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
    • புதியமின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 9.35 மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு புதிய மின்கம்பங்கள் மூலம் ரவணசமுத்திரம் பகுதிக்கு இணைப்பு வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஒன்றியம் ரவணசமுத்திரம் ஊராட்சி சின்னத்தெரு கிட்டகல் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்நிலையில் போதிய மின் அழுத்தம் இல்லாததால் இக்கிராமத்தில் கடந்த 15 வருடங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் இருப்பதால் கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இதையடுத்து ரவணசமுத்திரம் ஊராட்சிமன்றத் தலைவர் முகம்மது உசேன், மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததையடுத்து புதியமின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 9.35 மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு புதிய மின்கம்பங்கள் மூலம் ரவணசமுத்திரம் பகுதிக்கு இணைப்பு வழங்கப்பட்டது. பொதுமக்கள் புதிய மின்மாற்றிக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் முகம்மது உசேன், மின் வாரிய கல்லிடைக்குறிச்சி கோட்ட பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர் ராமகிளி, உதவிப் பொறியாளர்கள் ஜீவானந்தம், விஜயராஜ், ரவணசமுத்திரம் ஜமாத் தலைவர் சாகுல் கமீது, செயலாளர் செய்யது அப்பா, சிராஜிதீன், ரிபாய், ஊராட்சி துணைத் தலைவர் ராமலட்சுமி, ஊராட்சி உறுப்பினர்கள் கோமதி, மொன்னா முகமது, முகம்மது யஹ்யா, மெகருண்நிஷா, ஜானகிராமன், கனகா, முகைதீன் அப்துல் காதர், ஜமீலா காத்தூன், சமூக ஆர்வலர் நாகூர் மீரான் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×