search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திடீர் விசிட்: நீலகிரியில் கல்லூரி மாணவர்களை சந்தித்த பிரியங்கா காந்தி
    X

    திடீர் விசிட்: நீலகிரியில் கல்லூரி மாணவர்களை சந்தித்த பிரியங்கா காந்தி

    • வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
    • நீலகிரி வழியாக வயநாடு சென்ற அவர், கல்லூரி மாணவர்களை சந்தித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவரது மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.

    வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று அவர் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இதற்காக டெல்லியில் இருந்து தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார். நீலகிரி வந்த அவர் கல்லூரி மாணவர்களை சந்தித்தார். அவரை பார்ப்பதற்காக கல்லூரி மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

    அவர்களுடன் புன்னகைத்தவாறு கைக்கொடுத்து சென்றார். நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி செல்லும் பிரியங்கா காந்தி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக வருகிற 13-ந்தேதி வயநாட்டிற்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×