என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீலகிரி
- மலை ரெயில் சேவை 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.
- மலை ரெயில் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் அவற்றில் உற்சாகத்துடன் பயணித்து வருகின்றனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிந்த நிலையில், அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறையுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளி மாநில சுற்றுலா பயணிகளின் அதிகளவில் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். மேலும் எண்ணற்றோர் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயிலில் பயணிக்க ஏற்கனவே முன்பதிவு செய்து காத்துக்கொண்டு உள்ளனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி நிலவரப்படி ஜூன் 15-ந்தேதிவரை முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியல் 6 ஆயிரத்துக்கும் மேல் நீண்டு வருகிறது.
இதற்கிடையே நீலகிரியில் பலத்த மழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே பாறை உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக செல்லும் மலைரெயில் சேவை 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இருப்பினும் சனி-ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு தற்போது 5 பெட்டியுடன் கூடிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் அவற்றில் உற்சாகத்துடன் பயணித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த 10-ந்தேதிவரை மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் குன்னூர் ஊட்டி இடையேயான மலை ரெயிலில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் சென்றதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நீலகிரியில் கோடை சீசன் முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால் மலை ரெயில் போக்குவரத்து நிலையங்கள் மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளன.
- சுமார் 20 நிமிடம் சண்டையிட்ட காட்டெருமைகள்.
- யானை வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் குன்னூர் ஜிம்கானா கோல்ப் விளையாட்டு மைதானத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 20 நிமிடம் சண்டையிட்ட காட்டெருமைகளை அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்த காட்சிகளை செல்போனில் படம் ஒருவர் இதனை சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் அவ்வப்போது சாலைப் பகுதிக்கு வந்து செல்கின்றன. இதில் ஒற்றைக் கொம்பு ஆண் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து சாலைகளில் நடமாடி வருகிறது.
இந்த ஒற்றைக் கொம்பு யானை, காட்டேரி குடியிருப்பு பகுதி மற்றும் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் நடமாடியது. மேலும், சில நேரங்களில் சாலையில் நடமாடும் இந்த யானை வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
எனவே ஒற்றைக் கொம்பு யானையால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க 15 போ் கொண்ட வன ஊழியா்கள் பணி அமா்த்தப்பட்டு கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக குன்னூா் வனச்சரகா் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளாா்.
- விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகை:
உதகையில் அதிவேகமாக சென்ற டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்துள்ளானது. அப்போது அந்த சாலையில் நின்று கொண்டிருந்த 2 ஆட்டோக்கள், ஒரு கார் மீது மோதியது.
இச்சம்பவம் அப்பகுதி சிசிடிவி கேமராவில் டெம்போ டிராவலர் வேன் அதிவேகமாக வந்து கவிழ்ந்த காட்சிகள் காண்போரை பதறவைக்கிறது.
தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
?LIVE : உதகையில் அதிவேகமாக சென்ற டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்து https://t.co/wgfooKOgII
— Thanthi TV (@ThanthiTV) June 9, 2024
- கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
- கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதனை எதிர்த்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கொடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து கொடநாடு பஞ்சாய்த்து தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு நீதிபரிகள் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்பதாகவும், 2008 ஆம் ஆண்டிலிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது? எனவும் ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 2023 ஆம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தப்பட்டுதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், கொடநாடு எஸ்டேட்டுக்குள் விதிகளை மீறி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளவில்லை என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆய்வு செய்தால் தானே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? என தெரியவரும் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து கொடநாடு எஸ்டேட்டில் கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேயிலை, காப்பித்தோட்டங்களில் சிறுத்தை நடமாடுவது உறுதியானது.
- சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஊட்டி:
கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்னுவயல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் முகாமிட்டு வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது அங்குள்ள தேயிலை, காப்பித்தோட்டங்களில் சிறுத்தை நடமாடுவது உறுதியானது.
சிறுத்தை நடக்க முடியாமல் மெதுவாகவே அந்த இடங்களை கடந்து செல்கிறது.
சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம் அல்லது வயது முதிர்வு காரணமாக சிறுத்தை நடக்க முடியாமல் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விட்டதால் அந்த சிறுத்தை மனிதர்களை தாக்கும் முன்பு அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கூண்டில் சிக்காத பட்சத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முடிவு செய்துள்ளனர். சிறுத்தை பிடிபடும்பட்சத்தில் அதன் காயத்துக்கு சிகிச்சை அளிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கிரீன்பீல்டு, லோயர்பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதுமட்டுமின்றி அங்குள்ள கடைகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொருட்களை வாங்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகு கடைகளில் புகுந்த வெள்ளநீரை வியாபாரிகள் வெளியேற்றினர்.
ஊட்டி பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலைய பாலத்தின் அடியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
இதில் அந்த வழியாக சென்ற சுற்றுலா வாகனங்கள் சிக்கிக்கொண்டன. மேலும் படகு இல்ல சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.
ஊட்டி கமர்ஷியல் சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. இருப்பினும் ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கனமழையை ரசித்தபடி செல்போனில் வீடியோ பதிவுசெய்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் தென்படுவதால் அங்குள்ள விவசாயிகள் நிலத்துக்கு உரமிட்டு பராமரிக்க தயாாராகி வருகின்றனர். மேலும் அங்குள்ள காய்கறி தோட்டங்களில் தற்போது விதைப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஊட்டியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்து நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், பாதாள சாக்கடை குழாய்கள் ஆங்காங்கே நிரம்பி வழிந்து சாலைகளில் கழிவுநீர் வெளியேறுவதால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடைக்குள் விட வேண்டாம்.
மேலும் ஓட்டல், விடுதிகளின் உரிமையாளர்கள் கட்டிடம் மற்றும் வளாகத்தில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடை குழாய் இணைப்புக்குள் பொருத்தி இருக்கக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொது சுகாதார சட்டப்படி அபராதம் விதிப்பதுடன் கட்டிடத்தில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரெயில் சேவை தினசரி நடைபெற்று வருகிறது.
- நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
நீலகிரி:
தமிழகத்தின் பிரபல சுற்றுலா தலமாக நீலகிரி உள்ளது. இங்கு நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை காட்சிகளை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடை காலத்தில் விடுமுறையை கொண்டாட ஏற்ற இடமாக உள்ளதால் பலரும் குடும்பத்தினருடன் இங்கே வருகின்றனர்.
மேலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரெயில் சேவை தினசரி நடைபெற்று வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில், மலைகளுக்கு நடுவே நீலகிரி மலை ரெயில் செல்லும் அழகான காட்சியை தெற்கு ரெயில்வே வீடியோவாக வெளியிட்டுள்ளது. எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ரெயிலின் பிரம்மிப்பூட்டும் வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளை கடந்து சென்றுள்ளது.
- யானை வந்ததை அறிந்த பொது மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
- யானைகள் ஊருக்குள் வந்தால் அவற்றை விரட்டுவதற்கான நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பிதர்காடு அருகே மாணிவயல் என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தையொட்டி வனப்பகுதி உள்ளது. இதனால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.
சம்பவத்தன்று இரவு இந்த கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. யானை வெகு நேரமாக ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்தது. யானை வந்ததை அறிந்த பொது மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
ஊருக்குள் சுற்றிய காட்டு யானை அந்த பகுதியில் உள்ள மதில் சுவரைக் கடந்து, யானை உள்ளே நுழைந்தது. இதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டனர்.பொதுமக்கள் சத்தத்தை கேட்டதும் யானை அங்கிருந்து அருகே உள்ள பாக்கு தோட்டத்தை நோக்கி சென்றது. பாக்கு தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை அங்குள்ள பாக்கு மரங்களை முறித்து சேதப்படுத்தி சென்று விட்டது.
இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம். பகலில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே வனத்துறையினர் சந்தனக்குன்னு மற்றும் மானிவயல் பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வனசரகர் ரவி பேசியதாவது:-
யானைகள் ஊருக்குள் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழலில் காலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் சென்றால் வாகனங்களிலும், கையில் போதிய வெளிச்சங்களை வைத்து கொண்டும் செல்ல வேண்டும்.
யானைகள் ஊருக்குள் வந்தால் அவற்றை விரட்டுவதற்கான நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கடந்த சில தினங்களாக ஊட்டியில் பெய்த மழை காரணமாக பைக்காரா அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
- அவ்வப்போது மின் உற்பத்திக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் பைக்காரா அருவியும் ஒன்று. ஊட்டி அருகே பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது, பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவே 55 மீட்டர் மற்றும் 61 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் தொடர் அருவியாக அமைந்துள்ள இந்த பைக்காரா அருவி சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து இழுக்கிறது.
இதனால் நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த அணையில் இருந்து தினமும் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறக்கும்போது, மின் உற்பத்தி செய்த பின்னர் தண்ணீர் அணையில் இருந்து பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் உள்ள பெரிய பாறைகள் மீது பாய்ந்து செல்லும் காட்சி ரம்மியமாக காட்சியளிக்கும்.
தற்போது கடந்த சில தினங்களாக ஊட்டியில் பெய்த மழை காரணமாக பைக்காரா அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
அவ்வப்போது மின் உற்பத்திக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
- கிணற்றைச் சுற்றி இருக்கும் மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
- யானை குட்டி மீட்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர், அப்பகுதி மக்கள் பெருமூச்சு விட்டனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. சண்முகநாதன் என்பவர் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த யானை குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு இன்று காலை முதல் குட்டி யானையை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக குட்டி யானையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றது. அதில் முடியாததால் இரண்டாவதாக இன்னொரு பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டு கிணற்றைச் சுற்றி இருக்கும் மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதனிடையே, தாய் யானை குட்டி யானையைத் தேடி கிணற்றின் அருகே வந்துவிடாமல் இருக்க வனத்துறையினர் தாய் யானை உள்ளிட்ட மற்ற யானைகளை தனிக் குழுவாக நின்று கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சுமார் 30 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி சுமார் 11 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது. இதையடுத்தே வனத்துறையினர், அப்பகுதி மக்கள் பெருமூச்சு விட்டனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. சண்முகநாதன் என்பவர் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த யானை குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு இன்று காலை முதல் குட்டி யானையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.
ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக குட்டி யானையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றது. அதில் முடியாததால் இரண்டாவதாக இன்னொரு பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டு கிணற்றைச் சுற்றி இருக்கும் மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதனிடையே, தாய் யானை குட்டி யானையைத் தேடி கிணற்றின் அருகே வந்துவிடாமல் இருக்க வனத்துறையினர் தாய் யானை உள்ளிட்ட மற்ற யானைகளை தனிக் குழுவாக நின்று கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சுமார் 30 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி சுமார் 11 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது. இதையடுத்தே வனத்துறையினர், அப்பகுதி மக்கள் பெருமூச்சு விட்டனர்.
#WATCH | Tamil Nadu: A wild elephant fell into a 30-foot-deep pit in the Kolapalli area in the Nilgiris district, last night.
— ANI (@ANI) May 29, 2024
The elephant was rescued after around 11 hours by the forest department of Kolapalli. pic.twitter.com/xbRGevYi5N
- தமிழகத்தில் பிஏ, எம்.ஏ. வரலாறு, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
- வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி சகஜானந்தா போன்றோர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு இரண்டு நாட்களாக (நேற்று, இன்று) நடைபெற்றது.
இன்றைய மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தில் பிஏ, எம்.ஏ. வரலாறு, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டை, பெருங்காமநல்லூரில் விடுதலை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழக கல்லூரிகளின் பாடத்திட்டம் திராவிட இயக்க கதைகளால் நிரம்பியுள்ளது. வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி சகஜானந்தா போன்றோர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் இணைந்தனர். சுதந்திர போராட்ட இருட்டடிப்பு தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்துவிடும்.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
- பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள்.
- எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர்.
ஊட்டி:
புதிய பாராளுமன்றம் திறந்தபோது அங்கு தமிழகத்தின் செங்கோலை நிறுவியது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.
இந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய பாராளுமன்றத்தில் புனித செங்கோலை மீட்டெடுத்து நிறுவியதன் முதலாம் ஆண்டு நிறைவை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது.
நமது சுதந்திரத்துக்கு வழிவகுத்த அதிகாரப் பரிமாற்றத்தின் வெளிப்படையான கருவியாக விளங்கிய செங்கோலின் புண்ணிய பூமியும் அதன் பிறப்பிடமான தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கும் இது சிறப்புப் பெருமைக்குரிய நாள்.
தமிழர் பெருமையின் இந்த அடையாளத்தை வேண்டுமென்றே நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்வதிலிருந்து மீட்டு, அதை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை மீட்டெடுத்து நிறுவியதன் முதலாம் ஆண்டு நிறைவை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. நமது சுதந்திரத்துக்கு வழிவகுத்த அதிகாரப் பரிமாற்றத்தின் வெளிப்படையான கருவியாக விளங்கிய செங்கோலின் புண்ணிய பூமியும் அதன் பிறப்பிடமான தமிழ்நாட்டின் சகோதர,… pic.twitter.com/itkaqaSS0q
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 28, 2024
இதேபோல சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அவரது படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:-
பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்ரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர்.
எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர். அவரது தியாகங்கள், ஒன்றுபட்ட, வளர்ந்த மற்றும் வலிமையான பாரதத்தை அதன் பாரம்பரிய பெருமிதத்துடன் கட்டியெழுப்ப அனைத்து இந்தியர்களையும் ஊக்குவிக்கும் என கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்