search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டை ரூ.29 கோடியில் நவீனமயமாக்கும் திட்டம்- விரைவில் பணிகள் தொடங்க முடிவு
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டை ரூ.29 கோடியில் நவீனமயமாக்கும் திட்டம்- விரைவில் பணிகள் தொடங்க முடிவு

    • ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தி வந்தார்.
    • மார்க்கெட் குப்பைகளை நவீன எந்திரங்கள் மூலம் தினமும் சுத்தம் செய்யும் வசதி ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளது.

    திண்டுக்கல்:

    ஒட்டன்சத்திரத்தில் காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இது, தென்னிந்தியாவின் 2-வது பெரிய மார்க்கெட்டாக விளங்குகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தினமும் சுமார் 1,000 டன்னுக்கு மேல் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த காய்கறிகள் தமிழகம் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு, தினமும் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்து வருகிறது.

    நவீன வசதிகளுடன், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தி வந்தார். இதற்கான முயற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டார். இதன் எதிரொலியாக, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், ரூ.29 கோடி செலவில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் நவீன மயமாக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் மார்க்கெட் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது. அதில் வியாபாரிகளுக்கு கடைகள், உணவகம், போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வாகனங்கள் உள்ளே, வெளியே செல்வதற்கு தனி வழி, வாகனம் நிறுத்துமிடம், வங்கி சேவை, ஏ.டி.எம். மையம், போலீஸ் உதவி மையம், நிழற்குடை, குடிநீர், மழை நீர்வடிகால், கழிப்பறைகள், வெளியூரில் இருந்து வரும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு தங்கும் விடுதிகள், தடையில்லா மின்சாரம், கண்காணிப்பு கேமரா, அன்றாட சேகரமாகும் மார்க்கெட் குப்பைகளை நவீன எந்திரங்கள் மூலம் தினமும் சுத்தம் செய்யும் வசதி ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×