search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்காடியில் உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரி ஆய்வு
    X

    அங்காடியில் உணவு பொருட்களின் இருப்பு, தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.

    அங்காடியில் உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரி ஆய்வு

    • அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வித்திறன், ஆரோக்கியம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
    • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஒன்றியம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் முதன்மை செயலாளருமான டாக்டர் விஜயகுமார், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலை மையில் ஆய்வு செய்தார்.

    அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் விஜயகுமார் பேசியதாவது :-

    முதல்-அமைச்சர் உத்த ரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர் ஒன்றியம் தோழகிரிபட்டி, குருங்குளம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ கல்வி பயிற்றுவிக்கப் படுவதையும் ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து தோழகிரிபட்டி குருங்குளம் மேற்கு அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வித்திறன், ஆரோக்கியம், மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 16 பேர் கொண்ட விவசாய குழுவினர்களுக்கு 23 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்து, திருக்கானூர்பட்டி குருங்குளம் மேற்கு அங்காடியில் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    பாபநாசம் வட்டம் ராராமுத்திரிக்கோட்டை ஊராட்சியில்புதிதாக தூர்வாரி அமைக்க ப்பட்டுள்ள குளங்கரையில் மரக்கன்று நடும் பணியினை யும் பார்வையிட்டு , தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ ஆம்னி பஸ் நிலையம் அமைக்கும் பணி நணபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்நோக்கு கலையரங்க புதிய கட்டிட கட்டுமானப் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாநகராட்சி காவிரி நகரில் நவீன பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர வேண்டும் என சம்பந்தபட்ட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாக அவர் தோழகிரிபட்டி குருங்குளம் மேற்கு ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் இடுப்பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கி னார்.

    மேலும் தஞ்சை தாரகை மகளிர் சுய உதவி குழுவினரின் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் பொம்மைகள் விற்பனை கண்காட்சியினை பார்வையிட்டார்.

    அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், தாசில்தார் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×