search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
    X

    இறந்து கிடக்கும் ராஜாங்கம்.

    ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த ரயில் ராஜாங்கம் மீது மோதியது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வெட்டுக்கார தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 85). இவர் இன்று காலை தஞ்சை வண்டிக்கார தெரு பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அந்த நேரத்தில் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த ரயில் ராஜாங்கம் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜாங்கம் இறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தஞ்சை ரயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், தனிப்பிரிவு தலைமை காவலர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×