search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ஆம்னி பஸ் தீப்பிடித்தது: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
    X

    கோவையில் ஆம்னி பஸ் தீப்பிடித்தது: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

    • டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.
    • பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.

    கோவை:

    திருவண்ணாமலையில் இருந்து நேற்று இரவு கோவைக்கு தனியார் ஆம்னி ஒன்று புறப்பட்டு வந்தது.

    திடீர் தீ விபத்து படுக்கை வசதி கொண்ட அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    தாஸ் மற்றும் உஸ்மான் என 2 டிரைவர்கள் பஸ்சை ஓட்டி வந்தனர். பஸ் கோவையை நெருங்கியதும் ஒவ்வொரு பயணியாக தாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிக் கொண்டு இருந்தனர்.

    பீளமேடு பகுதிக்கு வந்தபோது பஸ்சில் 25 பேர் இருந்தனர். அப்போது பஸ்சை ஓட்டிய டிரைவர் தாஸ், பஸ்சில் தீப்பற்றுவது போல் உணர்ந்தார். உடனடியாக அவர் கீழே இறங்கி பார்த்தார். அப்போது டீசல் வரும் பைப்பில் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து பஸ்சை ஓரமாக நிறுத்தி, பஸ்சில் இருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றினார். அனைத்து பயணிகளும் பதறி அடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கினர். பயணிகள் இறங்கிய அடுத்த நொடியில் பஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. டிரைவர்கள் தீயை அணைக்க போராடினர்.

    ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. பஸ் முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. அதிகாலை நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.

    அடுத்தக்கட்டமாக அந்த பஸ்சை அங்கிருந்து அகற்றுவதற்கான பணிகள் தொடங்கி நடந்தன. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்காக அந்த டிரைவருக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×