என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் இரவிலும் கடைகள் திறக்க அனுமதி வழங்க வேண்டும்- வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை
Byமாலை மலர்15 Oct 2022 2:42 PM IST
- செல்வராஜ் தலைமையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
- 23-ந் தேதி இரவு முழுவதும் கடைகள் திறக்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு) சரவணகுமாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாநகர பகுதிகளில் வருகிற 20, 21, 22-ந் தேதிகளில் இரவு 2 மணி வரையிலும், 23-ந் தேதி அன்று இரவு முழுவதும் கடைகள் திறந்து வணிகம் செய்ய வழக்கம் போல் இந்த ஆண்டும் அனுமதி வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் மேலும் சில போலீஸ் அதிகாரிகளிடமும் மனு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன், மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், துணைத்தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார், தொகுதி செயலாளர் கருப்பசாமி, செய்தி தொடர்பாளர் பகவதிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×