என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓசூரில் ஆசிரியர் தின விழாவையொட்டி 45 வார்டுகளில் உள்ள அரசு பள்ளிகளின் ஆசிரிய- ஆசிரியையர் கவுரவிப்பு
- ஆசிரியர் தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
- பாராட்டி நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஓசூர்,
ஆசிரியர் தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, ஓசூரில் மாநகராட்சி கல்விக்குழு சார்பில் அரசு ஆர்.விஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப், உருது மேல்நிலைப்பள்ளி, முல்லை நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.
இதில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் புருஷோத்தம ரெட்டி, யசஸ்வினி மோகன், மோசின் தாஜ் நிசார் அகமது உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினர்கள், மேலாண்மைக்குழு துணைத் தலைவர் ஏஜாஸ் அகமது, தி.மு.க. பகுதி செயலாளர் ராமு, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியையர் ,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவின்போது, மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளை பாராட்டி நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.