search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் தபால் ஊழியர்கள் ஒருநாள்  வேலை நிறுத்த போராட்டம்
    X

    பாளை தலைமை தபால் நிலையத்தில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    பாளையில் தபால் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்

    • தபால் துறையை தனியார் மயமாக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறை ஊழியர்கள் கடந்த 3,4.5-ந் தேதிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
    • பாளை தலைமை தபால் நிலையத்தில் அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனததின் புறநிலை ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    தபால் துறையை தனியார் மயமாக்ககூடாது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறை ஊழியர்கள் கடந்த 3,4.5-ந் தேதிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இந்நிலையில் நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்திலும் ஊழியர்கள் போராட்த்தில் ஈடுபட்டனர்.

    பாளை தலைமை தபால் நிலையத்தில் அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனததின் புறநிலை ஊழியர் சங்கத்தினர் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில் கோட்ட செயலாளர்கள் ஜேக்கப்ராஜ், அருண்குமார், சுப்பிரமணியன், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    தொடர்ந்து தபால் ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக மாற்ற வேண்டும், கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×