என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு- கோவை மாநகராட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
- கூட்டத்தில் திருக்குறள் வாசித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- 55-வது வார்டில் அவிநாசி சாலை செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது.
கோவை
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. துனை மேயர் வெற்றிசெல்வன், கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திருக்குறள் வாசித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல் முறையாக மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கமிஷனர் பிரதாப்புக்கு மேயர் கல்பனா மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் 44-வது ஒலிம்பியாட் போட்டியை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார். 18 மாதங்கள் நடக்க வேண்டிய பணிகளை 4 மாதங்களில் முடித்து காட்டியுள்ளார். இது இந்தியாவிற்கு பெருமை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து மண்டலங்களிலும் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார பணியாளர்களை புதிதாக நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கிழக்கு மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக் பேசுகையில், விமான நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கழிவுநீர் புகுந்து தேங்கி நிற்கிறது இது மழைக்காலங்களில் ஊருக்குள் போகும் வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 55-வது வார்டில் அவிநாசி சாலை செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.
வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பேசும் போது, வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கப்படும் போது அந்த பகுதியில் உள்ள மற்ற குழாய்கள் உடைந்து சேதமடைகிறது இதனால் அடிக்கடி நீர் வெளியேறுகிறது.
எனவே அதனை சரி செய்ய வேண்டும்.மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மேயர் வீட்டுக்கு ஒரு கோடி செலவு செய்யப்பட்டு பணம் வீணாக்கப்படுகிறது என அ.தி.மு.க கவுன்சிலர் தெரிவித்துள்ளார் அதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கல்வி குழு தலைவர் மாலதி பேசும்போது பூங்காக்கள் கல்வி விளையாட்டு மைதானம் எங்களது குழுவில் உள்ளது. ஆனால் தற்போது மாமன்ற செயலாளர் கல்வி மட்டும் தான் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் எங்களுக்கு வராது என கூறுகிறார். இது எங்களது உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே இதற்கு உடனடி தீர்வு வேண்டும் என்றார் இதனால் மாவட்ட கூட்டத்தில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது இது எடுத்து மேயர் 4 நாட்களில் இதற்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.
இதேபோல் கோவை மாநகரில் கடந்த 3 மாத காலத்தில் மட்டும் ரூபாய் 161 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையாளர்.பிரதாப் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்