search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி அருகே பட்டாசு தயாரிக்கும் போது தீ விபத்தில் பெண் படுகாயம் உரிமையாளர் கைது
    X

    கோப்பு படம்

    செம்பட்டி அருகே பட்டாசு தயாரிக்கும் போது தீ விபத்தில் பெண் படுகாயம் உரிமையாளர் கைது

    • தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.
    • அஜாக்கிரதையாக வெடி தயாரித்த குற்றத்திற்காக ஆலையின் உரிமையாளரை கைது செய்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(55). இவர் அதேபகுதியில் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகள் தயாரித்து வருகிறார். இதற்காக பல்வேறு நபர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் பணியாற்றிய வீரக்கல்லை சேர்ந்த பழனிச்சாமி மனைவி ஈஸ்வரி(52) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் உடல் கருகினார்.

    பலத்த காயங்களுடன் திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து உரிய பாதுகாப்பு மற்றும் உபகரணங்கள் இல்லாமல் அஜாக்கிரதையாக வெடி தயாரித்த குற்றத்திற்காக ஆலையின் உரிமையாளர் பெருமாளை கைது செய்தனர். பின்னர் அவரை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×