search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விளாம்பட்டியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள்
    X

    விளாம்பட்டியில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்கதிர்களை படத்தில் காணலாம்.

    விளாம்பட்டியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள்

    • முதல் போக சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி நெல் பயிர்களை நடவு செய்தனர்.
    • தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி நெல் மணிகளாக விளைந்துள்ள நேரத்தில் மழை ஏதும் பெய்தால் மிகுந்த அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற கலக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    நிலக்கோட்டை:

    வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்போக பாசனத்துக்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் அணைப்பட்டி, விளாம்பட்டி, சிவஞானபுரம், மட்டப்பாறை, ராமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முதல் போக சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி நெல் பயிர்களை நடவு செய்தனர்.

    அவ்வாறு நடவு செய்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் நல்ல மகசூல் தரும் வகையில் விளைந்து நிற்கிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூட எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் வெயில் காலமாக இருந்தது.

    திடீரென தற்போது சாரல் மழை பெய்து வருவதால் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். எது எப்படி இருப்பினும் தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி நெல் மணிகளாக விளைந்துள்ள நேரத்தில் மழை ஏதும் பெய்தால் மிகுந்த அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற கலக்கத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் சில நாட்கள் மட்டும் மழை பெய்யாமல் இருந்தால் நெல்மணிகளை அறுவடை செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

    Next Story
    ×