search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்ல முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
    X

    விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

    நல்ல முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

    • 2-வது நாள் கஞ்சி வார்த்து, மஞ்சள் நீராட்டு விளையாட்டு விழா நடந்தது.
    • தப்பாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே மாளாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நல்ல முத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது.

    அப்போது திரளான பக்தர்கள், பால்குடம் , காளியாட்டம், காவடி, பாடைக்காவடி எடுத்து தப்பாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இரவு வான வேடிக்கையுடன் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது.

    2 -வது நாள் கஞ்சி வார்த்து, மஞ்சள் நீராட்டு விளையாட்டு விழாவும், சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

    இதில் கோபுராஜபுரம் மாளாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாளாபுரம் கிராமவாசிகள், நாட்டாமைகள், பஞ்சாயத்து தலைவர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், இளை ஞரணி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×