search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா
    X

    பந்தக்கால் நடும் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா

    • கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது.
    • பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு கோவில் செயல் அதிகாரி முருகையன் தலைமை தாங்கினார். குருக்கள் வினோத் மற்றும் பாலு விழாவுக்கான பூஜையை நடத்தினர். இதில் முன்னாள் அறங்காவலர் பாலகிருஷ்ணன் ராஜா, முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், டாக்டர் ராஜா, சர்வாலய உழவார பணிக்குழுவை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், துரை ராயப்பன், எடையூர் மணிமாறன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சண்முக சுந்தரம், லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் ஸ்ரீனிவாசன், கவுன்சிலர் எழிலரசன், சந்திரராமன் மற்றம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×