search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பன்னீர் திராட்சை
    X

    தோட்டங்களில் பன்னீர் திராட்சை காய்த்து தொங்குவதை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பன்னீர் திராட்சை

    • ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நாட்டு பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • இந்த பன்னீர் திராட்சைகள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி சிறுமலை அடிவார பகுதிகளான வெள்ளோடு, செட்டியபட்டி, பெருமாள்கோவில்பட்டி, முருகன்பட்டி, பூசாரிபட்டி, ஜாதிகவுண்டன்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நாட்டு பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பருவமழை கைகொடுத்த நிலையில் விவசாயிகள் வழக்கத்தை விட அதிகமாக பன்னீர்திராட்சை சாகுபடி செய்தனர். சுமார் 120 நாட்களில் மகசூல் தரக்கூடிய பன்னீர்திராட்சை இப்பகுதி மண்ணின் தன்மை மற்றும் விவசாயிகளின் பராமரிப்பு காரணமாக அதிகசுவையுடன் காணப்படுகிறது.

    இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் பன்னீர்திராட்சை கொத்து கொத்தாக நன்கு விளைந்து காணப்படுகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் ஒரு கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.45 வரை விலை கொடுத்து வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இப்பகுதியில் அறுவடை முடியும் வரை மழையோ, காற்றோ வீசாமல் இருந்தால் விளைச்சல் மேலும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயி ஸ்டீபன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக திராட்சை நல்ல விளைச்சலை கொடுத்தது. அறுவடையின்போது மழை பெய்யாததால் ஓரளவு லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது சில இடங்களில் திராட்சைகள் பறிக்காமல் விடப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பன்னீர் திராட்சைகள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அரசுபன்னீர் திராட்சை விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×