என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பங்குனி பிரமோற்சவ திருவிழா - பால்வண்ண நாத சுவாமி கோவிலில் கொடியேற்றம்
- கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.
- 11-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலின் துணைக்கோவில் ஆகும். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 13 நாள் நடைபெறும்.
இந்த விழாவில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகள் காலை, இரவு ஆகிய இரண்டு வேளைகளும் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை ராமசாமி பட்டர் ஏற்றி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.