search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
    X

    கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றபோது எடுத்த படம்.

    மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

    • மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது.
    • 10-ம் நாளான ஏப்ரல் 4-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை யொட்டி காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. காலை மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிகால சிறப்பு பூஜை நடந்தது. இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து விழாவின் 6-ம் நாளான வருகிற 31-ந் தேதி பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறும். 10-ம் நாளான ஏப்ரல் 4-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஹோமமும், 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு மேல் பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 10 நாட்களும் இரவு 8 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை நிர்வா கிகள் ஆத்திக்கண் நாடார், அகோபால் நாடார், உதய குமார் நாடார், தினேஷ் நாடார், செந்தில் நாடார், நாராயணராம் நாடார், சுப்பிரமணியன் நாடார், கண்ணன் நாடார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அய்யனார்-அம்பாள்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டிருந்த காட்சி.



    Next Story
    ×