search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா
    X

    பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா

    • இந்த ஆண்டு திருவிழா கடந்த 30-ந்தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.
    • நாளை நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சப்பரத்தில் பவனிவருதல் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடைவிழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 30-ந்தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல் புஷ்பாஞ்சலி, நண்பகலில் சிறப்பு பூஜையும், தொடர்ந்து அன்ன தானமும் வழ ங்கப்பட்டது.

    இரவு உடன்குடி வட்டாரப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, வறட்சி நீங்கி பசுமை வேண்டி பெண்கள் பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்யும் திருவிளக்கு பூஜையும், இரவு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது.

    நேற்று காலை மேளதாளம், வாண வேடிக்கையுடன் பால்கு டம் எடுத்து பவனிவருதல், நண்பகல் 12 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையுடன் உச்சினி மாகாளி அம்மன் சிங்க வாக னத்தில் பவனி வருதல் நடந்தது. இன்று காலை 9 மணி, இரவு 7 மணிக்கு வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் வீதிஉலா வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜைநடு, இரவு 12 மணிக்கு சந்தன மாரியம்மன் கிரிவாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல், நாளை (புதன்கிழமை) நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் பவனிவருதல், 4-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அக்கினி குண்டத்தில் பக்தர்கள் இறங்குதல், இரவு 8 மணிக்கு கேரளா புகழ் கலக்கல் கண்ணன் குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சி, 5-ந் தேதி (வெள்ளிக்கி ழமை) சங்கடக்கார சுவாமி கோவில் காலை 8 மணிக்கு வருசாபிஷேகம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு சிறப்பு படையல் பூஜை, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×