என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா கலந்தாய்வு கூட்டம்
- கூட்டத்திற்கு தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
தென்காசி:
பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரணியசுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற 25-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இத்திருவிழா நடத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதந்திராதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, கிருஷ்ணன், கீழப்பாவூர் பால்துரை, வணிகர் சங்க நிர்வாகிகள், காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க நிர்வாகிகள், அனைத்து சமுதாய நிர்வாகிகள் மற்றும் 10-ம் திருவிழாவில் பால்குடம் எடுத்து வரும் பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், ஆவுடையானூர், கல்லூரணி, செட்டியூர், பனையப்பட்டி, திப்பணம்ட்டி அரியப்பபுரம், வெங்காலிபட்டி , கல்லூரணி, ஆரியங்காவூரை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது. சாதி ரீதியான வாசகங்களோ, தலைவர் படம் பொறித்த பனியன்களோ அணியக்கூடாது. சாதித்தலைவர்கள் படம் போட்டு விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. 10-ம் திருவிழாவன்று மதியம் 12 மணிக்குள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.