search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபால்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்
    X

    கடையில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.

    கோபால்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

    • பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    கோபால்பட்டியில் உள்ள கடைகள் மற்றும் பேக்கரிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக்குமார் தலைமையில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. மேலும் மருந்துக் கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக்கூடாது. மருந்துக் கடைகளில் சட்டவிரோதமாக மருத்துவம் பார்த்தல், ஊசி செலுத்துதல் போன்றவை கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மேலும் எச்சரிக்கை அறிவிப்புகள் இல்லாமல் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×