search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிடப்பில் கிடக்கும் புறவழிச்சாலை பணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திட்டக்குடி பொதுமக்கள்: விரைந்து முடிக்க கோரிக்கை
    X

    போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் 108 ஆம்புலன்ஸ்.

    கிடப்பில் கிடக்கும் புறவழிச்சாலை பணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திட்டக்குடி பொதுமக்கள்: விரைந்து முடிக்க கோரிக்கை

    • மாநில நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிறமத்திற்கு ஆளகின்றனர்.
    • உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்படைகிறது.

    கடலூர்:

    திட்டக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் 108 ஆம்புலன்ஸ். கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் விருத்தாசலம் ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், ஆட்டோக்கள், சைக்கிள், செல்வோர் என பொதுமக்கள் இந்த சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். திட்டக்குடி நகராட்சியில் மாநில நெடுஞ்சாலை குறுகியதாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிறமத்திற்கு ஆளகின்றனர்.

    மேலும் அன்றாடம் விபத்துகள் ஏற்பட்டு அரசு மருத்துவமனை செல்வது வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சாலையில் வரும் பொழுது உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்படைகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    திட்டக்குடியில் போக்குவரத்து காவலர்கள் நியமனம் தேவை என கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடியில் போக்குவரத்து காவல்துறையினரை நியமன செய்து திட்டக்குடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் அவ்வாறு கட்டுப்படுத்தினால் ஓரளவு விபத்துக்கள் குறையும் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறை செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.

    மேலும் திட்டக்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக செட் அமைப்பதாக கூறி கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கு எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாமல் நகராட்சி விருப்பத்தின்படி இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மேலும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்தால் அனைத்து பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் வந்து சென்றால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக அலட்சியமாக செயல்படுவதால் இதில் பாதிக்கப்படுவது அன்றாடம் பஸ்சில் பயணம் செய்யும் தொழிலாளர்கள், சிறு குரு விவசாயிகள், சிறுகுரு வணிகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் உள்ளதை விரைந்து முடிக்க வேண்டும். திட்டக்குடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×