என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
- பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நாகப்பட்டினம்:
திருக்குவளை ஊராட்சி கீழ்குடி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் ஊராட்சி சார்பில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் முறையாக வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் திருக்குவளையில் இருந்து மேலப்பிடாகை செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி செல்வம் , திருக்குவளை போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பொது மக்களுக்கு டேங்கர் லாரியின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது என்றும் முடிவானது.
இதில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதி யில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.