search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
    X

    திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடினர்.

    டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்

    • திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • திருராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் உள்ள புனித குளத்தில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

    தஞ்சாவூர்:

    எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது.

    முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன்படி இன்று ஆடி அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராட லட்சணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் காவிரி ஆறில் புனித நீராடி ஐயாறப்பர் கோவிலில் சென்று வழிபட்டனர்.கும்பகோணத்தில் மகாமகக்குளம், பகவத்ப–டித்துறை, சக்கரப்படித்துறை ஆகிய இடங்களில் பூஜை பொருட்களை வைத்து வேத மந்திரங்களை சொல்லி முன்னோர்களையும், இஷ்ட தெய்வங்களையும் வழிபட்டனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திரு ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் உள்ள புனித குளத்தில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் கடல் அதாவது சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படும் காவிரி சங்கமத்தில் பொதுமக்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வருகின்றனர். இதனை முன்னிட்டு சீர்காழி,மயிலாடுதுறை, பொறையார் பகுதியில் இருந்து பூம்புகாருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 100- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் இன்று பலிகர்ம பூஜைகள் நடைபெற்றது. பின்னர் முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதிகடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடலில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்துபோன தங்களின் முன்னோர்களுக்கு பச்சை, அரிசி, தேங்காய் காய்கறிகள், பழங்கள், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவைகளை வைத்து திதி கொடுத்து தர்ப்பணம் செய்து பின்னர் கடலில் புனித நீராடி வழிபட்டனர். பின்பு வேதாரண்யம் வேதாரண்யஸ்ர சுவாமி ஆலயத்தில் மணிகர்ணிகை திர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி வேதாரண்யேஸ்வர சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    Next Story
    ×