என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வடமதுரை அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் அவதி
Byமாலை மலர்16 Dec 2022 10:54 AM IST
- பெட்டி நாயக்கன்பட்டி மற்றும் கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி பாசி படர்ந்துள்ளது.
- மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே உள்ள பெட்டி நாயக்கன்பட்டி மற்றும் கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி பாசி படர்ந்துள்ளது.
இதனால் பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பழுதாகி வருகின்றன. மேலும் பைக்கில் செல்பவர்கள் விழுந்து பலத்த காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.
மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதைகளிலும் இதே நிலைமை உள்ளது.
ரெயில்வே நிர்வாகத்தினர் சுரங்கப்பாதைகளை முறையாக பராமரிப்பதில்லை என சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விவசாயிகள், கிராமமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
Next Story
×