search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மக்கள் நீதிமன்றம்
    X

    கோவையில் மக்கள் நீதிமன்றம்

    • 26-ந் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
    • வழக்காடிகள், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீர்வு பெறலாம்.

    கோவை:

    தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில், கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது.

    இந்நிலையில், வரும் 26-ந் தேதி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை நீதிமன்ற வளாகங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்றவழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள் போன்றவற்றுக்கு உடனடி தீர்வு பெறலாம்.

    எனவே மேற்கண்ட வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் வரும் 24-ந் தேதி வரை சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, வழக்காடிகள், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீர்வு பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×