search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் துறைரீதியான ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சுகன்யா உடனிருந்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் துறைரீதியான ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, தமிழ் வளர்ச்சித்துறையில் பராமரிக்கப்படும் வருகைப் பதிவேடு, கொடுபடா பதிவேடு, பணப்பதிவேடு, சுத்தநகல் பதிவேடு, பயணக்குறிப்பு பதிவேடு, சில்லரை செலவினம், ஆட்சிமொழித் திட்டம் முன்னேற்ற விழுக்காடு பதிவேடு, துறைவாரிப் பதிவேடு, கருவூல ஒத்திசைவுப் பதிவேடு, வங்கிக்கணக்குப் புத்தகம், அஞ்சல் வில்லைப் பதிவேடுகள், கருவூலப் பதிவேடு உள்ளிட்ட பல பதிவேடுகளை இயக்குநர் அருள் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெரம்பலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சுகன்யா உடனிருந்தனர்.

    • நாளை மறுநாள் (புதன் கிழமை) காலை 10 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
    • இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினமான நாளை மறுநாள் (புதன் கிழமை) காலை 10 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    கூட்டத்தை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

    உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருந்திட வேண்டு என்பதற்காக உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கினார்.
    • ஆனால் உயர்கல்வி முடித்திடும் அனைவருக் கும் பழையமுறையில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரு கின்றோம்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-

    அண்ணாத்துரை தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த போது ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருந்திட வேண்டு என்பதற்காக உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கினார்.

    இது தொடர்ந்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக 2020-ல் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு அரசிற்கு ஏற்பட்ட நிதிச் சுமையால் ஆசிரியர்களுக்கு காலம் காலமாக வழங்கி வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மாற்றி அமைத்து அரசாணை வெளியிட்டதில் 9.3.2020-க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களிடம் கருத்துருக்கள் பெற்று அதன் அடிப்படையில் பழைய முறையில் ஊக்க ஊதியம் வழங்கிட நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    ஆனால் உயர்கல்வி முடித்திடும் அனைவருக் கும் பழையமுறையில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரு கின்றோம்.

    எனவே முதல்வர் உயர்கல்வி முடித்திட்ட ஆசிரியர்களுக்கு பழைய முறையில் கணக்கிட்டு ஊக்க ஊதியம் வழங்கிட ஆணை பிறப்பித்திட வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

    • முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
    • பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மாநில தலைவர் அக்ரி மாதவன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த அம்மனுவில் கூறப் பட்டுள்ளதாவது, வேளாண் அறிவியல் கல்வியை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் அறிமுகம் செய்து வேளாண்மை பட்ட தாரிகளை முதுநிலை ஆசிரி யர்களாக நியமனம் செய்ய வேண்டுதல்.

    மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் வேளாண் அறிவியல் ஆசி ரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

    வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்ப பட்டதாரிகளை பள்ளிக்கல்வித்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகியவற்றில் உரிய பணியிடங்களில் நியமனம் செய்து பல்லாயிரக்கணக்கான வேலையில்லா வேளாண் பட்டதாரிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    தமிழ்வளர்ச்சித்துறை அலுவலக செயல்பாடுகள் - இயக்குநர் நேரில் ஆய்வு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் நேற்று துறைரீதியான ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, தமிழ் வளர்ச்சித்துறையில் பராமரிக்கப்படும் வருகைப் பதிவேடு, கொடுபடா பதிவேடு, பணப்பதிவேடு, சுத்தநகல் பதிவேடு, பயணக்குறிப்பு பதிவேடு, சில்லரைச் செலவினம், ஆட்சிமொழித் திட்டம் முன்னேற்ற விழுக்காடு பதிவேடு, துறைவாரிப் பதிவேடு, கருவூல ஒத்திசைவுப் பதிவேடு, வங்கிக்கணக்குப் புத்தகம், அஞ்சல் வில்லைப் பதிவேடுகள், கருவூலப் பதிவேடு உள்ளிட்ட பல பதிவேடுகளை இயக்குநர் அருள் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெரம்பலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சுகன்யா உடனிருந்தனர்.


    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் 1033 என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம்

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துக்கள் குறித்தும், என்னென்ன காரணங்களால் அந்த விபத்துகள் நடைபெற்றது. மீண்டும் அந்த இடங்களில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் பேசுகையில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் விபத்து ஏற்படும் நேரங்களில் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உடனடியாக அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அவசர ஊர்தி சம்பவ இடத்திற்கு வருகை தந்து போதிய உதவிகள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாது, வாகனங்கள் பழுதாகி நின்றாலோ, எரிபொருள் இல்லாமல் நின்றுவிட்டாலோ, வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, அவசர உதவி ஏற்பட்டாலும் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அழைக்கலாம்.

    24 மணிநேரமும் அவசரகால ஊர்தி தயார் நிலையில் இருக்கும் . 1033 என்ற எண் குறித்து வாகன ஓட்டிகளுக்கோ, பொதுமக்களுக்கோ போதிய விழிப்புணர்வு இல்லை. ஆகையால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரத்தில் உதவ இப்படி ஒரு வசதி உள்ளது என்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசுங்கள். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடைகள் தெரியாத காரணத்தால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்ணை படம்பிடித்து காவல்துறைக்கு அனுப்பும் நவீன தொழில்நுட்பத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் அமல்படுத்த தேவையான திட்ட அறிக்கையினை தயார் செய்து வழங்கிட வேண்டும்.

    அவ்வாறு அனுப்பப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு டிரைவரன் உரிமத்தை ரத்துசெய்து, சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மஞ்சுளா, ஆர்.டி.ஓ. (பொ) சத்திய பாலகங்காதரன், டிஎஸ்பி பழனிசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ) பிரபாகரன், வாகன ஆய்வாளர் ராஜாமணி மற்றும் தாசில்தார்கள், காவல்துறையினர், போக்குவரத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பெரம்பலூருக்கு 2 தங்கபதக்கம்

    பெரம்பலூர், 

    65-வது குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் குடியரசு தின விழா போட்டிகளில் முதல் 2 இடங்களை வென்ற மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்த போட்டிகளில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி. எஸ்.சாத்விகா, 14 வயதிற்குட்பட்ட 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கம் பதக்கம் பெற்றுள்ளார்.

    அதே போல் பெரம்பலூர் தந்தை ஹென்ஸ் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சஜீவா, 14 வயதுக்குட்பட்ட 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். 2 பேரும் தங்க பதக்கம் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்

    கல்லூரி பேராசிரியர் அதிரடி கைது

    பெரம்பலூர்,  

    விழுப்புரம் மாவட்டம் திருவண்ணை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவள்ளுவன். இவரது மகள் சுபா ஆடலரசி (வயது 26). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியிள் அலுலலக உதவியாளராகவும், அதே பள்ளியின் மாணவிகள் விடுதியில் காப்பாளராகவும் பணி புரிந்தது வந்தார்.

    சம்பவத்தன்று தனது விடுதி அறைக்கு சென்ற அவர் அங்கு துப்பட்டாவில் துக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் மதியம் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் விடுதி அறைகளை சுத்தம் செய்ய சென்ற போது சுபாஆடலரசி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுபாஆடலரசி இறப்பதற்கு முன்பாக கைப்பட உருக்கமான கடிதம் எழுதியுள்ள்ளார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக பெரம்பலூர் போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே சுபா ஆடலரசி தற்கொலை செய்து கொள்ள கூடியவர் இல்லை என்றும், மகளின் சாவில் சந்தேகம் உள்ளதகாவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் அவரது பெற்றோர் பெரம்பலூர் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் பள்ளி மற்றும் விடுதி விடுமுறையில் உள்ள போது விழுப்புரத்திலிருந்து மகள் ஏன் வந்தார் என்றும் சந்தேகம் எழுப்பினர்.

    இதை தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது சுபா ஆடலரசி தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அதே நிறுவன கல்லூரியில் பணியாற்றிவரும் கும்பகோணத்தைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் சுபா ஆடலரசியை சத்தியராஜ் காதலித்து வந்ததும், அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தும், இருவரும் சேர்ந்து பல இடங்களுக்குச் சென்று ஒன்றாக சுற்றி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் அவருக்கு சுபா ஆடலரசியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

    பின்னர் வேறு ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்துவந்தார். இது சுபா ஆடலரசிக்கு தெரிந்து மன வேதனையில் இருந்தார். இதையடுத்து சுபா ஆடலரசி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து சத்தியராஜ் மீதும், அவரது தற்போதைய காதலி மீதும் தற்கொலைக்கு தூண்டிதாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சத்யராஜை பெரம்பலூர் நீநிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரம்பலூர் அருகே கிராம உதவியாளர்கள் மாநில கூட்டம்
    • 500-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    அகரம்சீகூர், 

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள சின்னாறு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில கூட்டம் மாநில தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் வரவேற்புரையாற்றினார். தமிழக அரசு அறிவித்த ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி தமிழ்நாட்டில் அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்,

    வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை ஆணையாளர்களை சந்தித்து வலியுறுத்தப்பட்ட 7 அம்ச கோரிக்கைகளில் 3 அம்ச கோரிக்கைகள் 10 நாட்களுக்குள்ளும், ஏனைய கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதனை நிறைவேற்ற வேண்டும். கிராம உதவியாளர்கள் இறந்தால் கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • குன்னம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த திருச்சி பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார்
    • பிடிபட்ட கொள்ளையர் மீது கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் இவரது மனைவி பார்வதி (வயது 60). இவர் நன்னை பஸ் நிறுத்தத்தில் இருந்து அருகாமையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு நடந்து சென்றார்.அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அறிமுகம் இல்லாத 2 மர்ம நபர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர்.

    பின்னர் மூதாட்டி அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.இதில் திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர் ராஜா முதல் தெரு பகுதியைச் சேர்ந்த பாட்டில் மணி என்கிற மணிகண்டன் (27) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.பின்னர் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ஆறரை பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    இவர் மீது மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த வழக்கில் குற்றவாளியை விரைவாக கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாமளா தேவி பாராட்டினார்.

    • சு. ஆடுதுறை கிராமத்தில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு. ஆடுதுறை கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், முருகன், அங்காள பரமேஸ்வரி அம்மன், பாவாடைராயர், வீரபத்திரர் இருளப்பர், மதுரை வீரன், ஐயப்பன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை வருண பூஜை அஷ்டபந்தனம் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.கும்பாபிஷேகமத்தை முன்னிட்டு மேலும் மங்கள வாத்தியங்கள் , செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • இரவும், பகலுமாக இயங்கும் கல்குவாரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • முறையாக பராமரிக்காததால் இரு சக்கர வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே க.எறையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் நடராஜன் தலைமையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட க.எறையூர் கிராமத்திற்கு அருகே உள்ள மலை பகுதிகளில் அதிகமாக கல் குவாரிகள் உள்ளது. இரவும், பகலுமாக இயங்கும் கல்குவாரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. நீகல் குவாரிகளில் இருந்து அதிக வேகத்தில் செல்லும் லாரிகள் மற்றும் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படுகிறது. மேலும் கற்கள், மண் அள்ளி செல்லும் லாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்கின்றன. அவ்வாறு செல்லும்போது சாலையின் இருபுறமும் கற்கள், மண் கீழே விழுவதால் சாலைகள் பழுதாகி உள்ளது. அதை முறையாக பராமரிக்காததால் இரு சக்கர வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

    அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்திருந்தனர்.

    பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் ரகு கூறுகையில், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது, கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க எடுக்கவேண்டும். வரும் 30ம் தேதி புதிய கல்குவாரி ஏலம் விடப்படுகிறது. அந்த ஏலத்தினை நடத்தக்கூடாது , நடத்தும் பட்சத்தில் பொதுமக்கள் சார்பில் எங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு ஏலம் விடப்படும் கல் குவாரிகளிலே சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என தெரிவித்தார்.

    ×