search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    அரியலூர் குபேர நகரில் நடந்து சென்ற

    குன்னம்,  

    அரியலூர் குபேர நகை சேர்ந்தவர் சுபாஷினி(வயது 42). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பள்ளி முடிந்து அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அவரின் தாலி சங்கிலியை பறித்து சென்று உள்ளனர்.

    இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் செயின் பறித்த பெரம்பலூர் வேப்பந்தட்டை பாலையூர் நவீன்குமார்(23), திருச்சி தென்னூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தான்ஸ்ரீ என்கிற தரணி(18) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • தந்தை இறந்த துக்கம் தாளாமல் குடிபோதையில் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை
    • இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    குன்னம்,  

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம், எழுமூர் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சரவணன் (வயது 20). ஊரை சுற்றி வந்த இவருக்கு அவரின் தந்தை குமார் புத்திமதி சொல்லி உள்ளார். இதன் பேரில் சரவணன் சென்னைக்கு சென்று ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சரவணன் தந்தை காலமானார். இந்த சோகம் சரவணனை வாட்டி வதைத்து வந்துள்ளது.

    சென்னையில் இருந்து விடுமுறைக்காக ஊர் திரும்பிய சரவணன், கீழபுலியூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து உள்ளார். போதை தலைகேறிய நிலையில், அவருக்கு தந்தையின் நினைப்பு வந்துள்ளது. இதனால விரக்தி அடைந்த அவர் எழுமூர் பெருமாள் கோவில் அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் கிணற்றுக்கு அடியில் உடல் சென்று விட்டதால் மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலில் பேரில் அங்கு வந்த மங்களமேடு போலீசார்,வேப்பூர் தீயணப்புத்துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில்பைக் மோதி முதியவர் பலி
    • இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னம்,  

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 75). இவர் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர் கோவிலில் மதியம் அன்னதானம் சாப்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக தனது சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, அந்த வழியாக கடலூரை சேர்ந்த அவினேஷ்(வயது 75) என்பவர் ஓட்டி வந்த பைக் அவர் மீது பயங்கரமாக மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ரெங்கசாமி படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் ரெங்கசாமி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ரெங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் டிப்-டாப் உடையணிந்து வீடுகள் தோறும் செல்லும் ஆசாமிகளால் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர்
    • கியாஸ் செக்கிங் என்று வருகிற நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியாக ஏமாற்ற வந்துள்ளனரா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக கியாஸ் நிறுவனத்தில் இருந்து வருகிறோம். உங்கள் வீட்டில் கியாஸ் அடுப்பு ரெகுலேட்டர் சரியாக உள்ளனவா? என சரி பார்க்க வந்திருக்கிறோம். இதற்கு ஓராண்டு சந்தா தொகை ரூ.250 என கூறி பொதுமக்களிடம் வீடு வீடாக சில டிப்-டாப் ஆசாமிகள் கேட்டு வருகின்றனர். வருகிற நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியாக ஏமாற்ற வந்துள்ளனரா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிலர் உண்மை என நம்பி ரூ.250 செலுத்தி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுபோன்று வரும் நபர்கள் உண்மையானவர்களா? அல்லது போலியானவர்களா? என உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆய்வு செய்தாக வேண்டும் என்ற பட்சத்தில் கியாஸ் சிலிண்டர்கள் இறக்கும் நபர்களுடன் வந்து இது போன்ற ஆய்வுகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் குன்னத்தில் நடைபெற்றது
    • மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி பொறுப்பாளர்கள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் குன்னம் பி.கே.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் குன்னம் குணசீலன் வரவேற்றார்.கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் பேசியதாவது,நாம் அனைவரும் வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில் முன்னாள் முதல்வர், ஜெயலலிதா அரசின் கனவு திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறியது போல போல எனக்குப் பின்னாலும் 100 ஆண்டு காலம் கட்சியும், ஆட்சியும் இருக்கும் என கூறினார். அது தற்போது தொடர வேண்டும். அம்மாவின் வழியில் இன்றைக்கு எடப்பாடியார் கட்சியை வழி நடத்தி வருகின்றார்.தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கிடைக்கக்கூடிய 32 டி எம் சி தண்ணீர் குறைந்து கொண்டே வருகிறது. திமுகவின் கூட்டணியான காங்கிரஸ் கர்நாடாகாவில் ஆட்சி நடத்துகிறது. ஆனால் காவேரி தண்ணீர் பெற தமிழக மக்களுக்காக ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மும்மாரி மழை பெய்து விவசாயிகளின் துயர் துடைத்தும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணையிலிருந்து அதிகபடியாக திறந்து விட்டு டெல்டா விவசாயிகளின் காவலராக இருந்தவர் எடப்பாடியார். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்பி சந்திரகாசி, வழக்கறிஞர் கே.என் ராமசாமி, மாவட்ட எம் ஜிஆர் மன்ற செயலாளர் எம்.என். ராஜாராம், முன்னாள் எம்எல்ஏ பூவைச் செழியன், மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் இளஞ்செழியன்,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி செயலாளர் முத்துசாமி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சந்திரகாசன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குன்னம் இளங்கோவன், சித்தளி நாகராஜ் குன்னம் ரங்கநாதன், அமுதா முருகேசன், குன்னம் கிளைச் செயலாளர்கள் மதியழகன், ராஜா, சடையாண்டி, மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் ஏ கே ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • மொபட் மீது கார் மோதியது
    • கார் மோதி முதியவர் பலி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் தோப்பு தெருவை சோ்ந்தவர் சிங்காரவேல் (வயது 72). இவர் நேற்று காலை 11.15 மணியளவில் மொபட்டிற்கு பெட்ரோல் போட பாளையம் கிராமத்திற்கு சென்றார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் பாளையம் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு திரும்பியபோது எதிரே வந்த கார், மொபட் மீதுமோதியது. இதில் படுகாயமடைந்த சிங்காரவேலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிங்காரவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில்வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










    • பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி
    • பயிற்சியின்காலஅளவு 30 நாட்கள்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புபயிற்சி மையத்தின் மூலம்பெண்களுக்கான தையல்கலை பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது.

    மேலும் இப்பயிற்சியில் சிம்மிஸ், பெட்டிக்கோடு, பட்டுப்பாவாடை , யூனிஃபார்ம்ஸ்கர்ட், அரைக்கை சர்ட், யூனிஃபார்ம் டிராயர் , பேபி ஃபிராக், கட்டோரி பிளவுஸ் , நைட்டி , சுடிதார் டாப் , அம்பர்லா டாப் , நைட் சூட் சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.

    பயிற்சியின்காலஅளவு 30 நாட்கள் பயிற்சிநேரம் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை. பயி ற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் கா லை,மாலை தேனீர்வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படுகிறது.

    விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐ.ஓ.பி. வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் , பான் கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அக்டோபர் 18-ந் தேதி நடக்கவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    • பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது
    • 28 கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் இருந்து பெற்ற மொத்தம் 28 கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நடைபெறும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக போலீசார் சார்பில் பாலக்கரையில் இருந்து போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தெரிவித்தார்.

    • கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • உடலை கைப்பற்றி மருவத்தூர் போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி பழனியம்மாள்(வயது 55). இவர் தனது கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று பழனியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மருவத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொற்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • சென்னையில் செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் சங்கத்தினர் தங்களை பணிநிரந்தரம் செய்து பணிவரன்முறை செய்ய வலியுறுத்தி சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து பெரம்பலூர் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் செவிலியர்கள் சங்கத்தினருடன் இணைந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன் தலைமை தாங்கினார். இதில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆனந்த், பொருளாளர் மஞ்சுளா மற்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மலேசியா பல்கலைக்கழகத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்
    • சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மலேசியா செல்கின்றனர்

    பெரம்பலூர்,

    சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்களை வாழ்த்தி, வழியனுப்பும் விழா நடைபெற்றது.பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து, மாணவர்களை வாழ்த்தி, சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார்.சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் நமது தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயிலும் 17 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகளும் கல்லூரி முதல்வர் இளங்கோவன், புல முதல்வர் அன்பரசன் ஆகியோர் மலேசியா மல்டி மீடியா பல்கலைக் கழகத்திற்கு செல்கின்றனர்.இவர்கள் அனைவரும் வருகின்ற 14 -ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மலேசியாவில் இந்த திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

    இந்த் திட்டத்தின் கீழ் செல்லும் மாணவர்களுக்கு செய்முறை அறிவு மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்க உதவும், உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்க உதவும்.தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிக்கும் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே வருகின்ற 16-ந் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. என தெரிவித்தார்.நிகழ்ச்சியின் போது கல்லூரி முதல்வர் இளங்கோவன், திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, டீன்கள் அன்பரசன், சிவராமன், சண்முகசுந்தரம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில், பேரளியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை முதல் மாலை வரை மின்சாரம் நிறுததப்படுவதாக அறிவிப்பு

    பெரம்பலூர், அக்.11-

    பெரம்பலூர் மற்றும் பேரளி பகுதிகளில் நாளை (12ம்தேதி) மின் தடை செய்யப்படுகிறது. இது குறித்து மின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (12-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும்பகுதிகளான பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், வாலிகண்டபுரம் மற்றும் செங்குணம் ஆகிய கிராமிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்

    இதே போல பெரம்பலூர் மின் கோட்டம், பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பெரம்பலூர், துறைமங்கலம், நான்குரோடு, அரணாரை மற்றும் கிராமிய பகுதிகளான எளம்பலூர் இந்திரா நகர், தண்ணீர்பந்தல், காவலர் குடியிருப்பு, சமத்துவபுரம், அருமடல் ஆகிய பகுதிகளில் நாளை(12-ந்தேதி) காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது. 

    ×