என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையம் அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
- தெற்கு மடத்தூர் பகுதியிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதிதாக டாஸ்மாக் அமைய உள்ள பகுதியிலிருக்கும் பாதை வழியாகதான் மாணவர்கள் அனைவரும் சைக்கிள்களில், வாகனங்களில் செல்லும் சூழ்நிலை ஏற்படும்.
- தெற்கு மடத்தூர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
தென்காசி:
கடையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு மடத்தூர் பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழிலே இருந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு மடத்தூர் ஊராட்சியில் இருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் பொட்டல்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி, அதேபோல் ஊரின் வடக்கே வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 கிலோ மீட்டர் தொலைவிலும் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தெற்கு மடத்தூர் கிராமத்தில் புதிதாக 3-வது டாஸ்மாக் கடையை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அது தொடர்பான பணிகளும் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே தெற்கு மடத்தூர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தெற்கு மடத்தூர் பகுதியிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதிதாக டாஸ்மாக் அமைய உள்ள பகுதியிலிருக்கும் பாதை வழியாகதான் மாணவர்கள் அனைவரும் சைக்கிள்களில், வாகனங்களில் செல்லும் சூழ்நிலை ஏற்படும்.
மேலும் டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவிற்குள் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருவதால் மது அருந்துபவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும். எனவே தெற்கு மடத்தூர் பகுதியில் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க கூடாது என கூறி தெற்கு மடத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் காங்கிரஸ் நிர்வாகியுமான சிவகுமார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த அசோக், ராஜா என்ற அருணாசலம், முருகேசன், மாரிசெல்வம், தமிழரசன் ஆகிய இளைஞர்கள் ஒன்றாக இணைந்து தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அனைவரையும் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்