என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பழைய பேட்டையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் மனு
- ரிச்சர்டு செல்லபாண்டியன்,பழையபேட்டை செக்கடி நாராயணசாமி கோவில் தெருவில் ஒரு இடத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளார்.
- அந்த இடத்தை ஒரு பெண் ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது.
நெல்லை:
பாளை மகாராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்டு செல்லபாண்டியன் (வயது 47). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சிதம்பரநாதன் என்பவரிடம் இருந்து நெல்லை பழையபேட்டை செக்கடி நாராயணசாமி கோவில் தெருவில் உள்ள ஒரு இடத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிச்சர்டு செல்லபாண்டியன் வெளியூருக்கு சென்று விட்டார். சில நாட்களுக்கு பின்னர் வந்து அவரது அனுபவத்தின் கீழ் உள்ள இடத்தை பார்க்க வந்தபோது அங்கு ஒரு தற்காலிக குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லபாண்டியன் விசாரித்தபோது அந்த இடத்தை ஒரு பெண் ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து செல்லபாண்டியன் மாநகர போலீஸ் கமிஷனரிடம் நிலத்தை மீட்டு தருமாறு புகார் அளித்தார்.
தொடர்ந்து அவர் இன்று கலெக்டர் விஷ்ணு தலைமையில் நெல்லை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி கூட்டத்திலும் அந்த மனுவை வழங்கினார்.
அப்போது அவருடன் ஸ்ரீனிவாசன், அருணகிரி, விஷ்ணு, சக்திவேல், கோமதிநாயகம் உடனிருந்தனர்.