search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழங்குடி இருளர் சமூகத்திற்கு வீட்டு மனை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
    X

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்

    பழங்குடி இருளர் சமூகத்திற்கு வீட்டு மனை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

    • கடந்த 2022 -ம் ஆண்டு காடாம்புலியூர் கணபதி நகர் என்ற இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
    • இதுவரை வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடம் எங்கு உள்ளது என்பதை அதிகாரிகள் காண்பிக்கவில்லை.

    கடலூர்:

    பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் மாநில துணைத்தலைவர் ஆதி மூலம், சமூக அலுவலர் ஆல்பேட்டை பாபு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-பண்ருட்டி வட்டத்தில் உள்ள 13 கிராமத்தில் பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த 16 குடும்பத்தினருக்கு கடந்த 2022 -ம் ஆண்டு காடாம்புலியூர் கணபதி நகர் என்ற இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

    எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அதிகாரிகள் நேரில் காண்பித்து அளவீடு செய்து கொடுக்க வில்லை. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்ததன் பேரில் நேற்று எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் இடுகாடும் மற்றும் இறந்த உடல்களை புதைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு செட்டிபாளையம், திடீர் குப்பம் உள்ளிட்ட 5 கிராமத்தை சேர்ந்த 66 குடும்பத்தினருக்கும், கரும்பூரை சேர்ந்த 8 குடும்பத்தினருக்கும் இதுவரை வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடம் எங்கு உள்ளது என்பதை அதிகாரிகள் காண்பிக்கவில்லை. ஆகையால் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி அரசு வழங்கிய இடத்தை காண்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×