search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் 28-ந் தேதி மறியல் போராட்டம்
    X

    தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் 28-ந் தேதி மறியல் போராட்டம்

    • கோவில்வென்னிக்கு இடையில் புதிதாக டோல்கேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஊர்வலமாக சென்று டோல்கேட் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருவதோடு விதிமுறைக ளுக்கு புறம்பாக டோல்கேட் அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

    ஆனால், நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து தேவையற்ற இடங்களில் 'டோல்கேட்'களை நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விடும் நிலை தொடர்கிறது. இந்த டோல்கேட்களைக் கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமா கும்போது டோல் கட்டண ங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், குத்தகை எடுத்த தனியார் நிறுவனங்க ளும் அதைக் கடைப்பிடிப்பது இல்லை.

    இந்நிலையில், தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில்

    தஞ்சாவூர் மாவட்ட எல்லையான பல்லவ ராயன்பேட்டைக்கும் திருவாரூர் மாவட்டம் தொ டங்கும் கோவில்வெ ன்னிக்கும் இடையில் புதிதாக டோல்கேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சாலையில் டோ ல்கேட் அமைக்கப்பட்டால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளார்கள்.

    ஆகவே டோல்கேட் அமைக்கும் பணியை உடனடியாக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 28-ந் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அம்மாபே ட்டையில் இருந்து ஊர்வ லமாக சென்று டோல்கேட் முன்பு பெருந்திரள் மறியல் போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×