என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான இடங்கள் அறிவிப்பு -வழிமுறைகள் வெளியீடு
- நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.
- விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழலை பாதுகாக்க
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலையை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பாதுகாப்பான முறையில்
விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவை உள்ளிட்ட பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் எண்ணெய், வண்ணபூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.
இயற்கை சாயம்
சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர்சார்ந்த மக்க கூடிய நச்சு கலப்படமற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலையை கரைக்க இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடங்கள் அறிவிப்பு
அதன்படி கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் ராமநதி அணை, ஆழ்வார்குறிச்சி கடனாநதி ஆறு, தென்காசி யானை பலம் அருகில், குற்றாலம் சிற்றாறு, இலஞ்சி, செங்கோட்டை குண்டாறு அணை, புளியரை ஆறு, லாலா குடியிருப்பு, அச்சன்புதூர் அனுமான் ஆறு, கரிசல் குடியிருப்பு அருகில், பாவூர்சத்திரம் பகுதியில் பாவூர்சத்திரம் குளம், கடையநல்லூர் மேலக்கடையநல்லூர், கடையநல்லூர் கருப்பாநதி அணை, வாசுதேவநல்லூர் சிமெண்ட் தொட்டி, ராஜ் பிரிக்ஸ் சேம்பர், நெல்கட்டும்செவல், வாசுதேவநல்லூர் ராயகிரி பிள்ளையார் மந்தையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.
மேலும் விபரங்ளுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்