search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
    X

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

    • போட்டி நாளன்று மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து, போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
    • கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரி டமும் பரிந்துரைப்பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வருகிற 28-ந் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடையே தமிழில் படைப்பாற்றலலயும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் ஒவ்வொரு போட்டிக்கும் வழங்குவதோடு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெற்று வருகிறது.

    இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் அரசு செலவில் செல்லும் வாய்ப்பையும் பெறுவர்.

    2022-23-ம் ஆண்டுக்கான 11, 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 28-ந் தேதியன்று கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

    போட்டி நாளன்று மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து, போட்டிகளில் கலந்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் விதிமுறைகள் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த போட்டிகளில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 11, 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரி டமும் பரிந்துரைப்பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×