என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை
- பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து ரெயில்நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
- பயணிகள் கொண்டு வரும் உடமைகள் முற்றிலும் சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து ரெயில்நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைதொடர்ந்து தமிழகத்தில் சென்ைன, மதுரை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் குடைபாறைப்பட்டியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிக்கு சொந்தமான வாகன குடோன் மீது தீைவக்கப்பட்டது. இதில் ஒரு கார் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பலானது.
இதனையடுத்து பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் பா.ஜ.க நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேர வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று அமாவாசை என்பதால் பக்தர்கள் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இதுபோன்ற இடங்களில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு செய்துள்ளனர்.
ஏற்கனவே சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து திண்டுக்கல் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெடிகுண்டு உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் ரெயிலில் கொண்டு செல்லப்படுகிறதா என்றும் சோதனை நடத்தப்பட்டது.
பயணிகள் கொண்டு வரும் உடமைகள் முற்றிலும் சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்பட்டது. கொடைரோடு ரெயில்நிலையத்தில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் ஜெயபிரித்தா தலைமையிலான போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்