search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகுல்காந்தியை ராவணனாக சித்தரித்து போஸ்டர் - பா.ஜனதாவை கண்டித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்
    X

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

    ராகுல்காந்தியை ராவணனாக சித்தரித்து போஸ்டர் - பா.ஜனதாவை கண்டித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்

    • காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை ராவணன் போல சித்தரித்து பா.ஜனதா அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு சித்திரம் நேற்று வெளியிடப்பட்டது.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் களக்காடு நகராட்சியில் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை ராவணன் போல சித்தரித்து பா.ஜனதா அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு சித்திரம் நேற்று வெளி யிடப்பட்டது.

    அதனை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் களக்காடு நகராட்சியில் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதில் பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ராகுல்காந்தி, மோடி அரசின் பொய் பிம்பத்தை உடைத்து விட்டார். மோடிக்கும் அதா னிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டார்?

    அதற்காக பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தி யின் எம்.பி. பதவி பறிக்கப் பட்டது. எதையாவது செய்து ராகுல் காந்தியை பேச விடாமல் தடுக்கலாம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

    ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து ராகுல் காந்தியின் மீது மிகப்பெரிய பயத்தில் பா.ஜனதாவினர் உள்ளார்கள்.

    கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம், மணிப்பூர் பாலியல் வன்கொடுமை இது போன்ற செயல்களை எல்லாம் செய்தவர்கள் தங்களை ராமராகவும், சுதந்திரம் பெற்ற முதல் இந்தியாவை கட்டமைத்த காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் ராவ ணனாக சித்தரிப்பது ஒரு கேலிக்கூத்து.

    பா.ஜனதாவினர் மத அரசியல் செய்ய நினைக் கிறார்கள். ராகுல் காந்தி இந்துக்களின் எதிரி என்று சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ராகுல் காந்தி எல்லா கோவிலுக்கும் செல்கிறார். எல்லா மதத்தி னரையும் சந்திக்கிறார்.

    இது போன்ற பொய் பித்தலாட்டமான கேலிச்சித்திரங்களை இந்திய மக்கள் நம்பமாட்டார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பா.ஜனதா அரசு தோற்று ராகுல் காந்தி பிரதமராக வருவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திரசேகரன், செல்ல பாண்டி, கக்கன், ராஜ கோபால், களக்காடு நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், களக்காடு மத்திய வட்டார தலைவர் காளப்பெருமாள், களக்காடு நகராட்சி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஷேக், நாங்குநேரி மேற்கு வட்டார தலைவர் வாகைதுரை, நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், கவுன்சிலர் சிம்சன் துரை,

    மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, ஜவஹர் பால் மன்ஞ் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா, களக்காடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விபின், கட்சி நிர்வாகிகள் வில்சன், தங்கராஜ், முத்துராமலிங்கம், காமராஜ், அன்வர், பிரியா முருகன், லதா சிம்சன், ஸ்ரீதேவி, அருள், பாலன், பெருமாள், முருகன், பாஸ்கர், பாஸ்கரன், வடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×