என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பருவகால நோய்கள் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை -கலெக்டர் தலைமையில் ஆலோசனை
- பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது.
- பொதுமக்கள் டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்பட்ச த்தில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், அரசு மருத்துவ மனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்த தாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவைகளை முறையாக பயன்படுத்திட வேண்டும். அனைத்து மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் கொசுப்புழு, முதிரி கொசு அழிக்கும் பணிகளுக்கு வருகை தரும் பணியாளர்க ளுக்கு முழு ஒத்துழைப்பு தர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களுக்கு தெரி விக்க வேண்டும். டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பற்றியும் அவற்றின் தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களையும், கொசுப்புழு தடுப்புப் பணியாளர்களையும் ஒருங்கிணைத்து அனைத்து மேல்நிலை மற்றும் தரைநிலை தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்திட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் பருவ மழைக்கு முன்னதாக அப்பகுதிகளிலுள்ள அனைத்து அரசு பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் மூன்று நாட்களுக்குள் முழுமையான தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையின் மூலம் காய்ச்சல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வும், காய்ச்சல் மற்றும் டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அப்பகுதிகளில் காய்ச்சல் தொடர்பான சிறப்பு முகா ம்கள் நடத்திட வேண்டும்.
அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ, மாணவி களுக்கு கொசு ப்புழு, முதிர் கொசு பற்றியும், பள்ளி மற்றும் கல்லூரி வளாக ங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சுகாதார மான முறையில் வைத்துக் கொள்ள விழிப்பு ணர்வு அளித்திட வேண்டும்.
பொதுமக்கள் டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்கு னியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்பட்ச த்தில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், அரசு மருத்துவ மனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுயமாக மருந்து உட்கொள்ளுதல் மருத்துவர்கள் ஆலோசனை யின்றி மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்த வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்சுகந்தி ராஜகுமாரி, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்