search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புயல், கனமழைபேரிடர் மீட்பு முன்னெச்சரிக்கை கூட்டம்
    X

    வடக்கு மாங்குடி ஊராட்சியில் பேரிடர் மீட்பு முன்னெச்சரிக்கை கூட்டம்.

    புயல், கனமழைபேரிடர் மீட்பு முன்னெச்சரிக்கை கூட்டம்

    • புயல், கன மழையால் பொதுமக்களின் பாதிப்பை தடுத்திடும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம்.
    • ஒருவார காலத்திற்கு தேவையான உணவு பொருள்கள், குழந்தைகளுக்கான பால், மற்றும் மருந்து. மத்திரைகள், மின்தடையை சமாளிக்க மெழுகுவத்திகள், கான்டா விளக்குகள் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மெலட்டூர்:

    அம்மாப்பேட்டை ஒன்றியம், வடக்கு மாங்குடி ஊராட்சியில் மாண்டஸ் புயல், கன மழையால் பொதுமக்களின் பாதிப்பை தடுத்திடும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அப்துல் நாசர், ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் லதா, கிராம உதவியாளர், மின்வாரிய பணியாளர்கள், தன்னார்வாலர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள்,

    பணித்தள பொறுப்பா ளர் மற்றும் தேசிய ஊரகப் பணி ஒருங்கிணைப்பாளர் கலந்துக் கொண்டனர்.

    ஆய்வு கூட்டத்தில் மழையால் பொதுமக்கள் வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மேட்டு பாங்கான இடங்களுக்கு மாற்றி உதவிடவும், மின்சாரம் தடை ஏற்படும் போது குடித்தண்ணீர் தட்டுபாட்டை போக்கிட மின் உற்பத்தி இயந்திரம் (ஜெனரேட்டர்) கொண்டு மேல் நீர் தேக்கத் தொட்டி மோட்டாரை இயக்கிடவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உணவுகள், மற்றும் தங்குவதற்கான ஏற்படு செய்துதர முடிவு செய்யப்பட்டது.

    மேலும் பொதுமக்கள் ஒருவார காலத்திற்கு தேவையான உணவு பொருள்கள், குழந்தைகளுக்கான பால், மற்றும் மருந்து. மத்திரைகள், மின்தடையை சமாளிக்க மெழுகுவத்திகள், கான்டா விளக்குகள் ஆகியவற்றை வாங்கி வைத்திருக்கவும், அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    மேலும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் அருகே செல்லவோ, தொடவோ கூடாது எனவும் புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×