search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் உலக வங்கி குழுவின் ஆய்வுக்காக முன்னேற்பாடு குழு ஆய்வு
    X

    முன்னேற்பாடு குழு ஆய்வு செய்த போது எடுத்த படம்.


    செங்கோட்டையில் உலக வங்கி குழுவின் ஆய்வுக்காக முன்னேற்பாடு குழு ஆய்வு

    • நீர் வளம், நில வளம் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக உலகவங்கி நிபுணர் குழு தமிழகம் வர உள்ளது.
    • திருந்திய நெல் சாகுபடியை வேளாண் பெருமக்கள் அதிக அளவில் கடைபிடித்து வருவதை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    செங்கோட்டை:

    நீர் வளம், நில வளம் என்ற திட்டத்திற்கு உலக வங்கி நிதி உதவியோடு தமிழகத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இணைத்து வேளாண் மேம்பாட்டுக்கான பல்வேறு பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    இந்த திட்டத்தை ஆய்வு செய்வதற்காக உலகவங்கி நிபுணர் குழு தமிழகம் வர உள்ளது. அதற்கான முன் ஆய்வு பணியை தமிழக அரசு குழுக்களின் மூலமாக பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறது.

    நீர்வள, நிலவள திட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் செயல்படும் திட்ட ஆய்வினை சென்னை தலைமை அலுவலகத்தின் கிருஷ்ணன் தலைமையில் ஜூடிஸ் டி செல்வா, பொறியாளர்கள் தங்கம், சந்திரசேகரன் அடங்கிய குழுவினர் செங்கோட்டை மற்றும் இலத்தூர் பகுதியில் ஆய்வு பணியை மேற்கொண்டார்கள்.

    வேளாண்மைத் துறையால் அறிமுகம் செய்யப்பட்ட திருந்திய நெல் சாகுபடியை பரவலாக வேளாண் பெருமக்கள் அதிக அளவில் கடைபிடித்து வருவதை பார்வையிட்டு விவசாயிகளின் அனுபவங்களை கேட்டறிந்தனர்.

    இதில் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் ஆலோ சனையின் பேரில் வேளாண்மை துணை இயக்குனர் பொறுப்பு உதயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொறுப்பு கனகம்மாள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக செங்கோட்டைக்கு வருகை தந்த குழுவினரை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் வரவேற்றார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் குமார்மற்றும் அருணாசலம் செய்திருந்தார்.

    Next Story
    ×