search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பன்னீர் ரோஜா விலை சரிவால் விவசாயிகள் வேதனை
    X

    பன்னீர் ரோஜா

    பன்னீர் ரோஜா விலை சரிவால் விவசாயிகள் வேதனை

    • திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • விழா காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் குறைந்துள்ளதால் பன்னீர் ரோஜா விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    நாளொன்றுக்கு கொடைரோடு சந்தைக்கு அதிகாலை 5 மணி முதலே சுமார் 500 கிலோ பன்னீர் ரோஜா பூக்கள் கொண்டு வரப்படுவது வழக்கம்.ஆனால் தற்போது விழா காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் குறைந்துள்ளதால் பன்னீர் ரோஜா விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

    தற்போது இந்த பூக்கள் ரூ.50-க்கு விற்றால் மட்டுமே நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் ஆனால் பன்னீர் ரோஜா பூ கிலோ ரூ.10 முதல் ரூ. 20 வரை மட்டுமே விற்பனை ஆவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    குறிப்பாக கொடைரோடு சந்தையில் இருந்து மதுரை மற்றும் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு பன்னீர் ரோஜா கொள்முதல் செய்து அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். பன்னீர் ரோஜாக்களின் வரத்து அதிகரித்துள்ளதாலும் விழாக்கள் மற்றும் சில்லறை வணிகர்கள், திருமண நிகழ்ச்சிகள் குறைந்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    எடுப்பு கூலிக்கு கூட இந்த விலை கட்டுபடி ஆகவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×