என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை
- ஆசிரியர் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில் ஓசூரில் முப்பெரும் விழா நடைபெற்றது.
- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினரை சந்தித்து பேசி கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு வருகிறார்.
ஓசூர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில் ஓசூரில் முப்பெரும் விழா நடைபெற்றது.
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமிதியில் நடந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் சீனி. சாரதி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாபதி தசரதராமிரெட்டி, ஓசூர் ஒன்றிய தலைவர் நாகபிரசாத் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். இதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மாநில தலைவர் ரவி, மாநில பொருளாளர் முருக.செல்வராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
பின்னர், சண்முகநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெற்று வந்த பல்வேறு சலுகைகள், உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், இன்று புதிய ஆட்சி உருவாகியுள்ளது. கடந்த ஆட்சியில், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் பழிவாங்கப்பட்டனர்.
தற்போதைய அரசு. ஆட்சிக்கு வந்ததும், கடந்த ஆட்சியில் போடப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை, ரத்து செய்துள்ளது. கடந்த ஆட்சியில் நியாயான கோரிக்கைகளுக்காக போராடியும், ஒரு முறை கூட எங்களை அழைத்து பேசவில்லை. இன்றைய முதல்-அமைச்சர் தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினரை சந்தித்து பேசி கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு வருகிறார்.
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி தவிர, மற்ற பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் படிப்படியாக நிறைவேற்றி தரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு,ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நலன் காத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்