search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய பொறியாளர் சங்கத்தின் தேசிய தலைவராக  ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் தேர்வு
    X

    தேசிய தலைவராக தேர்வான கல்லூரி முதல்வர் ரங்கநாத்துக்கு பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கிய காட்சி.

    இந்திய பொறியாளர் சங்கத்தின் தேசிய தலைவராக ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் தேர்வு

    • இந்திய பொறியாளர் சங்க தலைவராக ஒசூர் அதியமான் தேர்வு செய்யப்பட்டார்.
    • நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

    இந்திய பொறியாளர் சங்கத்தின் தேசியத் தலைவராக ஓசூர் அதியமான் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கவுகாத்தியில் நடைபெற்ற தேர்தலில், ரங்கநாத், அந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து, அதியமான் பொறியியற் கல்லூரி பேராசிரியர்களான என்.எஸ்.பத்ரிநாராயணன் (தன்னாட்சி செயல்பாடு), டீன் எஸ்.வெங்கடேசன் வானவியல் துறைதலைவர் ஜெ. அறிவுடைநம்பி, உயிரி தொழில்நுட்ப துறைதலைவர் மணிவாசகன், உயிரியல் மருத்துவ துறை தலைவி உதயசூரியா, கணித துறை தலைவி பிரமீளா கலாதரன், ஆங்கில துறை தலைவர் உத்தம் குமார், வேதியியல் துறைதலைவர் சிவகுமார், தகவல் தொழில்நுட்ப துறை தலைவி திலகவதி, மின்னணு தகவல் துறை துணை தலைவி, மேனகா தேவி மற்றும் இந்திய பொறியாளர் சங்க மாணவ பிரிவினர் கல்லூர முதல்வர் ரங்கநாத்தை பாராட்டி, வாழ்த்தினர். மேலும், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    Next Story
    ×