search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரதட்சணை கேட்டு சித்ரவதை பள்ளிஆசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கு சிறை மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
    X

    கோப்பு படம்

    வரதட்சணை கேட்டு சித்ரவதை பள்ளிஆசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கு சிறை மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

    • கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர், அவரது தாயார், தந்தை ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • பள்ளிஆசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் விஜி(27). இவருக்கும் நெல்சன் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நெல்சன் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு விஜியை நெல்சன் அவரது தாயார் சபரிஆரோக்கிய செல்வி, தந்தை அறிவழகன் ஆகியோர் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

    இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் விஜி புகார் அளித்தார். அதன்பேரில் 3பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இதில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்தது உறுதிசெய்யப்பட்டது. அதனைதொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நெல்சன் மற்றும் சபரிஆரோக்கியமேரி ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    அறிவழகனுக்கு 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.4ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×