search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் ரவிச்சந்திரன். 

    தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- கலெக்டர் தகவல்

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந்தேதி நடைபெறுகிறது.
    • 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் கல்வி தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர்(எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் 30.1.2023 முதல் செயல்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற

    28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

    இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய தென்காசி மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கின்றனர்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்டதன்படி அனைவரும் இதனை தவறாமல் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×