search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை
    X

    வெற்றிபெற்ற அணிக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் பரிசு வழங்கிய காட்சி.

    தூத்துக்குடியில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை

    • பரிசளிப்பு விழாவிற்கு சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி பேசினார்.
    • வெற்றி பெற்ற தூத்துக்குடி எம்.எஸ்.எம். அணிக்கு முதல் பரிசாக கலைஞர் கோப்பையும், 50 ஆயிரம் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மீளவிட்டான் பெரியசாமி திடலில் நடை பெற்ற கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா விற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரி மைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி பேசினார்.

    பரிசுக் கோப்பை

    இதில் மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பா ளர்கள் குருராஜ், மாதே ஸ்வரன், கணேசன், லவ ராஜா, டினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பா ட்டு அணி அமை ப்பாளரும், மாநகராட்சி மண்டலத் தலைவருமான வக்கீல் பாலகுருசாமி வரவேற்று பேசினார்.

    பின்னர் வெற்றி பெற்ற தூத்துக்குடி எம்.எஸ்.எம். அணிக்கு முதல் பரிசாக கலைஞர் கோப்பையும், 50 ஆயிரமும், வி.சி.சி. அணிக்கு 2-ம் பரிசாக கலைஞர் கோப்பையும், 30 ஆயிரமும், பொட்டல்காடு யு.எஸ்.சி. அணிக்கு 3-ம் பரிசாக கலைஞர் கோப்பையும், 20 ஆயிரமும், முள்ளக்காடு எம்.கே.சி.சி. அணிக்கு 4-ம் பரிசாக கலைஞர் கோப்பையும், 10 ஆயிரம் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

    சிறந்த விளையாட்டு வீரர்கள்

    மகளிர் அணியினருக்கும், தகவல் தொழில்நுட்ப அணியினருக்கும், இளைஞர் அணியினருக்கும் நடைபெற்ற சிறப்பு போட்டி யை தொடங்கி வைத்து அதில் வெற்றி பெற்றவ ர்கள், சிறந்த விளை யாட்டு வீரர்கள் அனை வருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில விளை யாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நம்பி, மாநகர துணைச் செய லாளர்கள் கீதா முருகேசன், கனக ராஜ், பிரமிளா, மாவட்ட துணைச்செ யலா ளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பி னர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, மாநகராட்சி மண்ட லத்தலைவர் கலைச்செல்வி, அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட பொறி யாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளர் சின்ன த்துரை, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தொண்டரணி அமை ப்பாளர் ரமேஷ், வக்கீல் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை அமைப்பா ளர்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, நாகராஜன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், துணை அமைப்பாளர் மகிழ்ஜான், இலக்கிய அணி அமை ப்பாளர் ஜீவன் ஜேக்கப், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாநகர மகளிர் அணி அமைப்பா ளர் ஜெயக்கனி, இளைஞர் அணி அமை ப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், மாநகர நெசவாளர் அணி அமைப்பாளர் சீதாராமன், துணை அமைப்பாளர் குமரன், தொழிலாளர் அணி துணைத்தலைவர் செந்தில் குமார், கவுன்சி லர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜெயசீலி, நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், வைதேகி, இசக்கியப்பன், கந்தசாமி, சுப்புலட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார், மாவட்ட பிரதிநிதிகள் சக்தி வேல், நாராயணன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பா ளர்கள் செல்வகுமார், ராஜா, அன்பழகன், பிரதீப், சில்வெஸ்டர் சாமுவேல், வட்ட செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, சதீஷ்குமார், பகுதி பொரு ளாளர் உலகநாதன், பகுதி இளைஞர் அணி அமை ப்பாளர் சூர்யா, மகளிர் அணி ரேவதி, சத்யா, சந்தன மாரி, கன்னிமரியாள், பெல்லா மற்றும் கருணா, மணி, கணேசன், மகே ஸ்வர சிங், பிரபாகர், அல்பட் உள்பட பலர் கலந்து கொ ண்டனர். முடிவில் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோக்கிய ராபின் நன்றி கூறினார்.

    Next Story
    ×