search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் 22-வது வார்டில் 100 பேருக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டை பெற ஏற்பாடு
    X

    கோவில்பட்டியில் 22-வது வார்டில் 100 பேருக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டை பெற ஏற்பாடு

    • கவுன்சிலர் ஜேஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டில் 100 பெண்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பயனாளிகள் சென்ற வேனை கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி வழி அனுப்பி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 22-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ஜேஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டில் 100 பெண்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    முன்னதாக மனுதாரர்கள் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் மற்றும் தாசில்தார்களிடம் பரிந்துரை பெற்று மருத்துவ அட்டை வாங்க வீண் கால தாமதமும் அலைச்சலும் ஏற்படுவதால் கவுன்சிலர் ஜேஸ்மின் லூர்துமேரி அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் மனுதாரர்களை நேரில் அழைத்துச் சென்று உரிய விசாரணை நடத்தி மருத்துவ அட்டை பெற்றுத்தர உதவினார். இறுதி கட்டமாக தனது சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை மருத்துவ அட்டை பெற்று வர தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அழைத்து சென்றார்.

    பயனாளிகள் சென்ற வேனை கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி வழி அனுப்பி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலி அந்தோணி பிரகாஷ் உட்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெற்று தர உதவியாக இருந்த தி.மு.க. கவுன்சிலருக்கும், நகராட்சி சேர்மன், அமைச்சர், மற்றும் தமிழக அரசுக்கும், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இதேபோல் அனைத்து கவுன்சிலர்களும் முன்னெடுத்தால் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பயனாளிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×