search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கல்
    X

    பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கப்பட்டது.

    பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கல்

    • காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.
    • எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்பகோணம் அடுத்த திப்பிராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

    முகாமை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகளையும், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டக ங்களையும், காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி., முழு ரத்த பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது.

    மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்துசெல்வம், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம், உதவி இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலாராணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன், சசிகுமார், திப்பிராஜபுரம் ஊராட்சி தலைவர் முருகையன், கட்சி நிர்வாகிகள் எஸ்.வி.எஸ்.இளங்கோவன், பழனி, கீழச்சேத்தி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×