என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பொதுக்கூட்டம்
- இளைஞர் எழுச்சி தொடர் பிரசார பயணம் என்ற அமைப்பு பொதுக்கூட்டம் காந்திஜி கலையரங்கம் முன்பு நடைபெற்றது.
- கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் தமிழ் பெருமாள் தலைமை தாங்கினார்.
சிவகிரி:
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக வேலை கொடு அல்லது வேலை கொடுக்கிற வரை மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் கொடு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதோடு வேலை வாய்ப்புகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடு என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி "எங்கே எனது வேலை" இளைஞர் எழுச்சி தொடர் பிரசார பயணம் என்ற அமைப்பு பொது க்கூட்டம் சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு நடைபெற்றது.
கூட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் தமிழ் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் தினேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினரும், தென்காசி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யுமான லிங்கம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.ஒய்.எப். நகர செயலாளர் பால்சாமி, தென்காசி மாவட்ட துணை செயலாளர் முனியாண்டி, சிவகிரி பேரூராட்சி மன்ற கவுன்சிலர் அருணாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை செயலாளர்கள் ராஜேந்திரன், வேலுச்சாமி, குருவு, சங்கரவடிவு மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.